போற்றிடு ஆன்மமே 1. போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி கர்த்தாவாம் வல்லோரை; ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை; கூடிடுவோம் பாடிடுவோம் பரனை மாண்பாய் சபையாரெல்லோரும். 2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை; ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை; ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம் யாவும் அவர் அருள் ஈவாம். 3. போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை; தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை; பேரன்பராம் பராபரன் தயவை சிந்திப்பாய் இப்போதெப்போதும். 4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்; ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்; சபையாரே சேர்ந்தென்றும் சொல்லுவீரே வணங்கி மகிழ்வாய் ஆமேன்.