உம்மை துதிக்கிறோம் 1. உம்மை துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே உம்மை பணிகிறோம், ஸ்வாமீ ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக, கர்த்தா ஸ்தேத்திரம் சொல்லுகிறோமே 2. கிறிஸ்துவே, இரங்கும்; சுதனே, கடன் செலுத்தி, லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக்குட்டி, எங்கள் மனு கேளும்: பிதாவினது ஆசனத் தோழா, இரங்கும். 3. நித்திய பிதாவின் மகிமையில், இயேசுவே, நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே, ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர், உன்னத கர்த்தரே, ஆமேன்