3. குறை யாவும் நீக்கிட,
நாதா, நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்,
நான் அசுத்த பாவிதான்,
நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான்,
நீர் நிறைந்த நித்தியரே.
4 / 4
என்தன் ஆத்ம நேசரே
4. பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னை சுத்திகரிக்க
அருள் பாயச்செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே,
என்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமி, என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊறுமேன்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen