தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க,
விண் ஜோதி கண்டனர்.
2. அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன்: திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.
3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.
4. இதுங்கள் அடையாளமாம்,
முன்னணைமீது நீர்
கந்தைபொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.
5. என்றுரைத்தான்; அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.
6. மா உன்னதத்தில், ஆண்டவா,
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்.