கண்டீர்களோ சிலுவையில் 1. கண்டீர்களோ சிலுவையில் மரிக்கும் இயேசுவை? கண்டீர்களோ காயங்களில் சொரியும் ரத்தத்தை? 2. "மன்னியும்" என்ற வேண்டலை கேட்டீர்களே, ஐயோ! "ஏன் கைவிட்டீர்"என்றார், அதை மறக்கக்கூடுமோ? 3. கண்மூடி, தலை சாயவே, "முடிந்தது" என்றார்; இவ்வாறு லோக மீட்பையே அன்பாய் உண்டாக்கினார். 4. அவ்வேண்டல் ஓலம் காயத்தால் ஈடேற்றம் வந்ததே; ஆ! பாவி, இதை நோக்குங்கால் உன் தோஷம் தீருமே. 5. சீர் கெட்டு மாண்டு போகையில் பார்த்தேன் என் மீட்பரை; கண்டேன், கண்டேன் சிலுவையில் மரிக்கும் யேசுவை!