இன்று கிறிஸ்து எழுந்தார் 1. இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலுயா! இன்று வெற்றிசிறந்தார் அல்லேலுயா! சிலுவை சுமந்தவர், அல்லேலுயா! மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலுயா! 2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம், அல்லேலுயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலுயா! அவர் தாழ்ந்துயர்ந்தாரே; அல்லேலுயா! மாந்தர் மீட்பர் ஆனாரே அல்லேலுயா! 3. பாடநுபவித்தவர், அல்லேலுயா! ரட்சிப்புக்குக் காரணர், அல்லேலுயா! வானில் இப்போதாள்கிறார்; அல்லேலுயா! தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலுயா!