கிறிஸ்து வீரரே!
இயேசு சேனைக் கர்த்தர்
பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக
முன்னே போகிறார்;
ஜெயக்கொடி ஏற்றி
போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோம், வாரும்,
கிறிஸ்து வீரரே!
இயேசு சேனைக் கர்த்தர்
பின்னே செல்வோமே!
2. கிறிஸ்து வீரர்கள், நீர்
வெல்ல முயலும்;
பின்னிடாமல் நின்று
ஆரவாரியும்!
சாத்தான் கூட்டம் அந்த
தொனிக்கதிரும்;
நரகஸ்திவாரம்
அஞ்சி அசையும்! - யுத்தம்
3. கிறிஸ்து சபை வல்ல
சேனை போன்றதாம்,
பக்தர் சென்ற பாதை
செல்கின்றோமே நாம்!
கிறிஸ்து தாசர் யாரும்
ஓர் சரீரமே,
விசுவாசம், அன்பு,
நம்பிக்கை ஒன்றே! - யுத்தம்
4. கிரீடம், ராஜ மேன்மை
யாவும் சிதையும்,
கிறிஸ்து சபைதானே
என்றும் நிலைக்கும்!
"நரகத்தின் வாசல்
ஜெயங் கொள்ளாதே,"
என்ற திவ்விய வாக்கு
வீணாய்ப் போகாதே! - யுத்தம்
5. பக்தரே, ஒன்றாக
கூட்டம் கூடுமேன்,
எங்களோடு சேர்ந்து
ஆர்ப்பரியுமேன்!
விண்ணோர் மண்ணோர் கூட்டம்
இயேசு ராயர்க்கே!
கீர்த்தி, புகழ், மேன்மை
என்றும் பாடுமே! - யுத்தம்