தூய்மை பெற நாடு
1. தூய்மை பெற நாடு;
கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை
உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு
சேர்ந்தோர் தாங்குவாய்,
யாவிலுமே தெய்வ
தயை நாடுவாய்.
2. தூய்மை பெற நாடு;
லோகத்தில் கோஷ்டத்தில்
தனித்திரு நாளும்
அவர் பாதத்தில்
யேசுவைப் போலாவாய்,
நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார்
அவர் சாயலை.
3. தூய்மை பெற நாடு;
கர்த்தர் நடத்த,
என்ன நேரிட்டாலும்,
அவர்பின் செல்ல;
இன்பம் துன்பம் நேர்ந்தும்
விடாய் அவரை,
நோக்கியவர் வாக்கில்
வைப்பாய் நம்பிக்கை.
4. தூய்மை பெற நாடு;
ஆத்மா அமர்ந்து,
சிந்தை செய்கை யாவும்
அவர்க்குட்பட்டு,
அன்பின் ஜீவ ஊற்றைச்
சேர்ந்து ருசிக்க,
முற்றும் தூய்மையாவாய்
விண்ணில் வசிக்க.