நடத்துமேன்;
வேறொளியில்லை வீடும் தூரமே,
நடத்துமேன்;
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஒர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்.
2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ!
முன்னாளிலே;
ஓத்தாசை தேடவில்லை; இப்போதோ
நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்புகொண்டேன், அன்பாக மன்னியும்.
3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்;
இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர்
நடத்திடும்;
உதய நேரம்வர, களிப்பேன்
மறைந்துபோன நேசரைக் காண்பேன்.