இம்மானுவேலின் இரத்தத்தால் 1. இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே; எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே. 2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்; மன்னிப்பும் மோக்ஷானந்தமும் அடைந்து பூரித்தான். 3. அவ்வாறே நானும் இயேசுவால் விமோசனம் பெற்றேன்; என் பாவம் நீங்கிப் போனதால் ஓயாமல் பாடுவேன். 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்; ஒப்பற்ற மீட்பர் நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன். 5. விண் வீட்டில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன்; என்தனை மீட்ட நேசத்தைக் கொண்டாடிப் போற்றுவேன்.