மரித்தாரே என் ஆண்டவர்
1. மரித்தாரே என் ஆண்டவர்
சிலுவையில் தானே!
மரித்தாரே என் ரட்சகர்,
ஆ, எனக்காகவே!
2. சிலுவைமீது ஜீவனை
என் மீட்பர் விட்டாரே;
எனக்குத்தான் இப்பலியை
செலுத்தி மாண்டாரே.
3. நான் எண்ணி எண்ணி வருகில்
என் நேசம் ஊக்கமாய்
கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில்
எரியும் பக்தியாய்
4. என் மீட்பர் இயேசு கிறிஸ்துதாம்
இவ்வருள் செய்தாரே;
நான் என்ன பதில் செய்யலாம்?
ஈடொன்றுமில்லையே.
5. என் தேகம், செல்வம், சுகமும்
என் ஜீவன் யாவுமே
சுகந்த பலியாகவும்
படைப்பேன், இயேசுவே.