பாய்ந்து இலங்கிடச் செய்வார்,
அனைத்தும் ஆள்வோர், "தாகமாய்
இருக்கிறேன்", என்றார்.
2. வெம்போரில் சாவோர் வேதனை,
வியாதியஸ்தர் காய்ச்சலும்,
குருசில் கூறும் இவ்வொரே
ஓலத்தில் அடங்கும்.
3. அகோரமான நோவிலும்,
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்;
என் ஆன்மாவும் ஒன்றே.
4. அந்நா வறட்சி, தாகமும்
என்னால் உற்றீர், பேர் அன்பரே;
என் ஆன்மா உம்மை முற்றிலும்
வாஞ்சிக்கச் செய்யுமே.