பாவிக்காய் மரித்த இயேசு 1. பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார்; கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார், அல்லேலூயா! கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார்; துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார், திகிலோடு மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே, பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே; அவர் காயம் தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும்; ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும்; அல்லேலூயா! வல்ல வேந்தே, வந்திடும்.