மா சோதனையில்;
பொல்லாங்கனை வென்று
போராட்டத்தினில்;
வீண் ஆசையை முற்றும்
கீழடக்குவாய்;
யேசையரை நம்பி
வென்றேகிப் போவாய்.
ஆற்றித் தேற்றியே காப்பார்
நித்தம் உதவி செய்வார்;
மீட்பர் பெலனை ஈவார்
ஜெயம் தந்திடுவார்.
2. வீண் வார்த்தை பேசாமல்
வீண் தோழரையும்,
சேராமலே நீக்கி
நல்வழியிலும்;
நின்றுக்கமும் அன்பும்
சற்றேனும் விடாய்;
யேசையரை நம்பி
வென்றேகிப் போவாய்.
3. மெய்விஸ்வாசத்திலே
வென்றேகினோன் தான்;
பொற்கிரீடம் பெற்றென்றும்
பேர் வாழ்வடைவான்;
மா நேசரின் பெலன்
சார்ந்தே செல்லுவாய்;
யேசையரை நம்பி
வென்றேகிப் போவாய்.