1. நல்ல செய்தி, இயேசுவை
நோக்கிப்பார், ரட்சிப்பார்;
நம்பி வந்த அவரை
நோக்கிப்பார், ரட்சிப்பார்;
எந்தப்பாவியாயினும்
தள்ளமாட்டேன் என்கிறார்;
துரோகஞ் செய்தபோதிலும்
நோக்கிப்பார், ரட்சிப்பார்.
2 / 4
நல்ல செய்தி இயேசுவை
2. எங்கும் செய்தி சொல்லுவோம்
நோக்கிப்பார், ரட்சிப்பார்;
தேசா தேசம் கூறுவோம்
நோக்கிப்பார், ரட்சிப்பார்;
எந்த நாடு தீவிலும்
இயேசு காத்து நிற்கிறார்;
மூடன் நீசன் ஆகிலும்
நோக்கிப்பார், ரட்சிப்பார்.
3 / 4
நல்ல செய்தி இயேசுவை
3. இன்னும் கேள், மா நேசராம்
இயேசுவே காக்கிறார்;
நம்பும் பக்தரையெல்லாம்
காக்கிறார், காக்கிறார்;
சற்றும் தவறாமலும்
கையில் ஏந்திக்கொள்ளுவார்;
கேடுபாடில்லாமலும்
காக்கிறார், காக்கிறார்.