சீர்திரியேக வஸ்தே நமோ சீர்திரியேக வஸ்தே நமோ நமோ, நின் திருவடிக்கே நமஸ்தே நமோ நமோ! பார்படைத்தாளும் நாதா, பரம சற்பிரசாதா, நாருறுந் தூயவேதா நமோ, நமோ, நமோ! சீர்திரியேக வஸ்தே நமோ நமோ, நின் திருவடிக்கே நமஸ்தே நமோ நமோ! 1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத் தாங்கி ஆதரிப்போனே - நமோ, நமோ! சொந்தக் குமாரன் தந்தாய், சொல்லரும் நலமீந்தாய் எந்தவீர் போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ! சீர்திரியேக வஸ்தே நமோ நமோ, நின் திருவடிக்கே நமஸ்தே நமோ நமோ! 2. எங்கள் பலத்தினாசா நமோ, நமோ, புது எருசலேம் நகர்ராசா நமோ, நமோ! எங்கும் நின் அரசேற, எவரும் நின் புகழ்கூற, துங்க மந்தையிற் சேர நமோ, நமோ, நமோ சீர்திரியேக வஸ்தே நமோ நமோ, நின் திருவடிக்கே நமஸ்தே நமோ நமோ! 3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட பலமளித் தெமைக்காகவா நமோ நமோ! கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி, திருமொழி பற்றும்பக்தி நமோ, நமோ, நமோ சீர்திரியேக வஸ்தே நமோ நமோ, நின் திருவடிக்கே நமஸ்தே நமோ நமோ!