கண்களை ஏறெடுப்பேன் கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என் கண்களை ஏறெடுப்பேன். விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து (2) எண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும். கண்களை ஏறெடுப்பேன். 1. காலைத்தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர் காலைத்தள்ளாட வொட்டார், வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர் (2) காலையும் மாலையும் கண்ணுறங்காதவர். கண்களை ஏறெடுப்பேன். 2. பக்தர் நிழல் அவரே - எனை ஆதரித்திடும் பக்தர் நிழல் அவரே, எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது (2) அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே. கண்களை ஏறெடுப்பேன். 3. எல்லாத் தீமைகட்டும் - என்னை விலக்கியே எல்லாத் தீமைகட்டும், பொல்லா உலகினில் போக்குவரத்தையும் (2) நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர். கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என் கண்களை ஏறெடுப்பேன்.