கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி (2)
பத்தியுடன் இத்தினம் வாஓடி.
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி
2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து (2)
சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் (2)
பாலனான யேசுநமின் சொத்து.
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி
3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் (2)
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் (2)
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம்.
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி
4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ (2)
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ (2)
ஆன பழங் கந்தை என்ன பாடோ.
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி
5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி (2)
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி (2)
இன்றிரவில் என்ன இந்த மோடி.
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி
6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு (2)
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு (2)
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு.
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி
7. இந்த்ரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே (2)
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே (2)
விந்தையது பார்க்கலாம் வா நேரே.
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி (2)
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி (2)
பத்தியுடன் இத்தினம் வாஓடி.
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடி