கண்டேனென் கண்குளிர
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்தி
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
கண்டேனென் கண்குளிர
1. பெத்தலேம் சத்திர முன்னணையில் (2)
உற்றோருக் குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக்
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
கண்டேனென் கண்குளிர
2. தேவாதி தேவனை, தேவசேனை (2)
ஓயாது தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
கண்டேனென் கண்குளிர
3. பாவேந்தர் தேடி வரும் பக்தர் பரனை, (2)
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான்
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
கண்டேனென் கண்குளிர
4. முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை, (2)
இத்தரை மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக்
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
கண்டேனென் கண்குளிர
5. மண்ணோர் இருள்போக்கும் மாமணியை, (2)
விண்ணோரும் வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக்
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
கண்டேனென் கண்குளிர
6. அண்டி னோர்க் கன்புருவாம் ஆரணனை, (2)
கண்டோர்கள் கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக்
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
கண்டேனென் கண்குளிர
7. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் (2)
முன்னறி யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று
கண்டேனென் கண்குளிர