ஆமென், அல்லேலூயா ஆமென், அல்லேலூயா! (2) மகத்துவத் தம்பராபரா ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா. (2) தொல்லை அனாதி தந்தார் (2) - வந்தார் இறந் துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா. (2) 1. வெற்றிகொண் டார்ப்பரித்து (2) - கொடும்வே தாளத்தைச் சங்கரித்து, - முறித்து, பத்ராசனக் கிறிஸ்து - மரித்து பாடுபட்டுத்தரித்து, முடித்தார். (2) 2. சாவின் கூர் ஒடிந்து, (2) - மடிந்து, தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து, ஜீவனே விடிந்து, - தேவாலயத் திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது. (2) 3. வேதம் நிறைவேற்றி,(2) - மெய் தோற்றி, மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி, பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி, பத்ராசனத் தேற்றி, வாழ்வித்தார். (2) ஆமென், அல்லேலூயா! (2) மகத்துவத் தம்பராபரா ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா. (2)