ஆத்துமமே, என் முழு உள்ளமே
ஆத்துமமே, என் முழு உள்ளமே, - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து; -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து.
1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள. (2)
ஆத்துமமே, என் முழு உள்ளமே, - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து; -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து.
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத. (2)
ஆத்துமமே, என் முழு உள்ளமே, - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து; -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து.
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான. (2)
ஆத்துமமே, என் முழு உள்ளமே, - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து; -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து.
4. வாதை , நோய் , துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த. (2)
ஆத்துமமே, என் முழு உள்ளமே, - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து; -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து.
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும். (2)
ஆத்துமமே, என் முழு உள்ளமே, - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து; -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து.
6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே. (2)
ஆத்துமமே, என் முழு உள்ளமே, - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து; -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து.