இயேசுவையே துதி செய்
கிறிஸ்தேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய்
1. மாசனுகாத பராபர வஸ்து, (2)
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து, (2)
இயேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய்
2. அந்தரவான் தரயுந் தரு தந்தன் (2)
சுந்தர மிகுந்த சவுந்தர நந்தன், (2)
இயேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய்
3. எண்ணின காரியம் யாவு முகிக்க (2)
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க, (2)
இயேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய்
கிறிஸ்தேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய்