ராச ராச பிதா மைந்த ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! (2) ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக. ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! 1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர நேசமே பணியே, தந்திர மோசமே தணியே! (2) நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! 2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே, (2) பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! 3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே. (2) கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே! 4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர் கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே (2) நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!