ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்,
மந்தையிற் கூட்டும்.,
ஆவியை மழைப்போலே யூற்றும்.
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்
இறங்கிடச் செய்யும்.
ஆவியை மழைப்போலே யூற்றும்.
1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்,
பரலோகஞ் சென்றீர்,
அன்பினால் ஜீவனை விட்டீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ,
ஏராளமான ஜனங்களைச் சேரும்
ஜனங்களைச் சேரும்.
ஆவியை மழைப்போலே யூற்றும்.
2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து
தூக்கிச் சுமந்து
சிதறுண்டலைகிற ஆட்டை
பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்
வாக்கையருளும்.
ஆவியை மழைப்போலே யூற்றும்.
3. காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்,
உம் பாதஞ் சேரும்,
காத்திருந்த பல பேரும்.
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்,
தூயாவி ஊற்றும்.
ஆவியை மழைப்போலே யூற்றும்.
4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடி,
நிதம் நிதம் தேடி,
தோத்திரக் கீதங்கள் பாடி.
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்,
அருள்மாரி ஊற்றும்.
ஆவியை மழைப்போலே யூற்றும், - பல
ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்,
மந்தையிற் கூட்டும்.,
ஆவியை மழைப்போலே யூற்றும்.