கன நேய மேவியே. (2)
1. மாய பாசத் தழுந்தி வாடி
மாளுஞ் சாவிதால், (2)
மிக மாயும் பாவி நான்.
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே.
2. தீமை செய்ய நாடுதென்றன்
திருக்கு நெஞ்சமே, (2)
மருள் தீர்க்கும், தஞ்சமே.
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே.
3. பரத்தை நோக்க மனம் அற்றேனே,
பதடிதான், ஐயா, (2)
ஒரு பாவி நான், ஐயா.
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே.
4. புதிய சிந்தை, புதிய ஆசை
புதுப்பித்தாக்கவே, (2)
அதைப் புகழ்ந்து காக்கவே.
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே.
5. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி,
இரந்து கெஞ்சவே, (2)
தினம் இதயம் அஞ்சவே.
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே.
6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு
கீதம் பாடவே (2)
அவர் கிருபை தேடவே.
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே.
7. தேவ வசனப் பாலின்மீது
தேட்டம் உன்னவே (2)
மிகு தெளிவு துன்னவே.
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே.
8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி
ஜெபித்துப் போற்றவே, (2)
மிக சிறப்பாய் ஏற்றவே.
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே.