இயேசுவின் நாமம்,
திவ்ய மதுரமாமே; – அதைத்
தேடியே நாடி,
ஓடியே வருவாய்,
தினமும் நீ மனமே.
1. காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே, – பாவக்
கசடதை அறுத்து,
சாபத்தைத் தொலைத்தார்!
கண்டுணர் நீ மனமே.
தேன் இனிமையிலும்
இயேசுவின் நாமம்,
திவ்ய மதுரமாமே.
2. பாவியை மீட்கத்
தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம்; - பின்னும்
நேமியாம் கருணை
நிலைவரமுண்டு
நிதம் துதி, என் மனமே. – தேன்
தேன் இனிமையிலும்
இயேசுவின் நாமம்,
திவ்ய மதுரமாமே.
3. காலையில் பனிபோல்
மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கி விடும்; – என்றும்
கர்த்தரின் பாதம்
நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ, மனமே. – தேன்
தேன் இனிமையிலும்
இயேசுவின் நாமம்,
திவ்ய மதுரமாமே.
4. துன்பத்தில் இன்பம்
தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம், – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால்
அனைத்துனைக் காப்பார்,
ஆசைகொள் நீ மனமே. – தேன்
தேன் இனிமையிலும்
இயேசுவின் நாமம்,
திவ்ய மதுரமாமே.
5. பூலோகத்தாரும்
மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம், – அதைப்
பூண்டு கொண்டால்தான்
பொன்னகர் வாழ்வில்,
புகுவாய் நீ மனமே. – தேன்
தேன் இனிமையிலும்
இயேசுவின் நாமம்,
திவ்ய மதுரமாமே.