மகனே, உன் நெஞ்செனக்கு தாராயோ மகனே, உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன், இது பாராயோ? (2) 1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே, - பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே. (2) மகனே, உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன், இது பாராயோ? 2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே, – அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே. (2) மகனே, உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன், இது பாராயோ? (2) 3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? (2) மகனே, உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன், இது பாராயோ? 4. உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா உவப்பாய்க் கதி ஈவேன், மகிழ்வாயே. (2) மகனே, உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன், இது பாராயோ? 5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே, – அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே. (2) மகனே, உன் நெஞ்செனக்கு தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன், இது பாராயோ?