ஐயையா நான் பாவி
ஐயையா, நான் பாவி,
என்னை ஆளும் தயாபரனே!
என்னை ஆளும் தயாபரனே! (2)
1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
போனவழி நடந்தேன்; - ஏ
சையா அபயம்! அபயம்! இரங்கும், மே
சையா, என் தாதாவே.
ஐயையா, நான் பாவி,
என்னை ஆளும் தயாபரனே!
என்னை ஆளும் தயாபரனே!
2. எத்தனைச் சூதுகள், எத்தனை வாதுகள்,
எத்தனைத் தீதுகளோ? - எனது
அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும் கோவே
ஐயையா, நான் பாவி,
என்னை ஆளும் தயாபரனே!
என்னை ஆளும் தயாபரனே!
3. வஞ்சகமோ கரவோ கபடமோ மாய்
மாலமோ, ரண்டகமோ? – மனச்
சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,
சமஸ்த்த நன்மைக் கடலே
ஐயையா, நான் பாவி,
என்னை ஆளும் தயாபரனே!
என்னை ஆளும் தயாபரனே!
4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்
பொறாமையும் ஆணவமும் - விட்
டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்
ஏகத்திரித்துவனே.
ஐயையா, நான் பாவி,
என்னை ஆளும் தயாபரனே!
என்னை ஆளும் தயாபரனே!
5. உன்னை எல்லாத்திலும் பார்க்கச் சிநேகித்
துனதடியார்களையும் – நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும் பராபரனே.
ஐயையா, நான் பாவி,
என்னை ஆளும் தயாபரனே!
என்னை ஆளும் தயாபரனே!