1. எல்லாம் அறிந்த பொருளே
எங்கள் இல்லாமை நீக்கும் அருளே (ஆஆஆ ஆ )
எல்லாம் அறிந்த பொருளே
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
(கொடும்) பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதா! (2)
2. எங்கும் நிறைந்த ஜோதியே,
ஏழைப் பங்கில் உறைந்த நீதியே, (ஆஆஆ ஆ ஆ)
எங்கும் நிறைந்த ஜோதியே,
சங்கடமான பாவ சங்கீதங்களை நீக்கும்
(எங்கள்) சங்கடமான பாவ சங்கீதங்களை நீக்கும்
துங்க இஸ்ரவேலின் வங்கிஷ கீரீடாதிபதி! (2)
3. வேதாந்த வேத முடிவே,
ஜெக ஆதாரம் ஆன வடிவே (ஆஆஆ ஆ ஆ)
வேதாந்த வேத முடிவே,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே இயேசு
( ஐயா) தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே இயேசு
நாதா, இரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை. (2)