உந்தஞ் சிலுவை என் மேன்மை,
உந்தஞ் சிலுவை என் மேன்மை. (2)
சுந்தரம் மிகும் இந்தப் பூவில் (2)
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும், (2)
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை,
உந்தஞ் சிலுவை என் மேன்மை.
1. திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி,
செல்வாக்குகள் மிக விருப்பினும்,
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு (2)
உரிய பெருமை யாவும் அற்பமே. (2)
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை,
உந்தஞ் சிலுவை என் மேன்மை.
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவநதியாம்;
துங்க இரத்த ஊற்றில் ழூழ்கித் (2)
தூய்மையடைந்து மேன்மையாகினேன். (2)
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை,
உந்தஞ் சிலுவை என் மேன்மை.
3. சென்னி, விலா, கை காலினின்று
சிந்துததோ! துயரோடன்பு
மன்னா, இதைப்போன்ற காட்சி (2)
எந்நாளிலுமே எங்கும் காணேன். (2)
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை,
உந்தஞ் சிலுவை என் மேன்மை.
4. இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்;
எந்த அரும் பொருள் ஈடாகும்? (2)
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன். (2)
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா!
உந்தஞ் சிலுவை என் மேன்மை,
உந்தஞ் சிலுவை என் மேன்மை.