வாரும் ஐயா போதகரே 1. வாரும் ஐயா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்; (2) சேரும் ஐயா பந்தியினில், (2) சிறியவராம் எங்களிடம். (2) 2. ஒளிமங்கி இருளாச்சே, உத்தமரே வாரும் ஐயா! (2) கழித்திரவு காத்திருப்போம், (2) காதலனே, கருணை செய்வீர். (2) 3. நான் இருப்பேன், நடுவில் என்றார் நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க (2) தாமதமேன் தயை புரிய (2) தற்பரரே, நலம் தருவீர். (2) 4. உன்றன் மனை திருச்சபையை உலகமெங்கும் வளர்த்திடுவாய் (2) பந்தமறப் பரிகரித்தே (2) பாக்யம் அளித் தாண்டருள்வாய். (2)