என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன், ஏற்றுக் கொள்ளும், யேசுவே. அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று (2) சொன்ன வாக்குத்தத்த மல்லாது, இப்போது, என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன், ஏற்றுக் கொள்ளும், யேசுவே. 1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய் அடிமைத் தனத்தி னின்றும் , (2) சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட (2) எந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன். என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன், ஏற்றுக் கொள்ளும், யேசுவே. 2. ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீன மாக்கி வைத்தேன்; (2) பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக் (2) காத்திருக்கின்றேன், கருணைசெய் , தேவா, என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன், ஏற்றுக் கொள்ளும், யேசுவே. 3. நீதியி னாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேன் உமக்கு; (2) ஜோதி பரிசுத்த ராலய மாகவே (2) சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை, என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன், ஏற்றுக் கொள்ளும், யேசுவே.