ஜெப சிந்தை எனில் தாரும், தேவா ஜெப சிந்தை எனில் தாரும், தேவா, என்னை அபயமென் றுனக்குக்கை அளித்தேன் பொற்பாதா. ஜெப சிந்தை எனில் தாரும், தேவா. 1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச, - உல கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச, தொன்மை ஆயக்காரன் போலஞ்ச, - பவ தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச. ஜெப சிந்தை எனில் தாரும், தேவா, 2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என் இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்; சடமுலகப் பேயை வெல்லும்-நற் சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். ஜெப சிந்தை எனில் தாரும், தேவா, 3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய, பேய்க்கண மோடுபோர் செய்ய, - நல் ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய. ஜெப சிந்தை எனில் தாரும், தேவா, என்னை அபயமென் றுனக்குக்கை அளித்தேன் பொற்பாதா. ஜெப சிந்தை எனில் தாரும், தேவா.