அன்பே பிரதானம் அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். (2) 1. பண்புறு ஞானம், - பரம நம்பிக்கை, இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம், அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 2. பலபல பாஷை - படித்தறிந்தாலும், கல கல வென்னும் - கைம்மணியாமே. அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும், அன்பிலையானால் - அதிற்பயனில்லை. அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 4. துணிவுடனுடலைச் - சுடக்கொடுத்தாலும், பணிய அன்பில்லால் - பயனதிலில்லை. அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 5. சாந்தமும் தயவும் - சகல நற்குணமும், போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள. அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 6. புகழிறு மாப்பு - பொழிவு பொறாமை, பகைய நியாயப் - பாவமுஞ் செய்யா. அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 7. சினமடையாது - தீங்கு முன்னாது, தினமழியாது - தீமை செய்யாது. அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம். 8. சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும், மிகைபட வென்றும் - மேன்மை பெற்றோங்கும். அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்.