ஜீவ வசனங் கூறுவோம் ஜீவ வசனங் கூறுவோம்; - சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. ஜீவ வசனங் கூறுவோம்; - சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். 1. பாதகப் பேயின் வலையில், - ஐயோ! திரள்பேர் பட்டு மடியும் வேளையில்; பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து வேதனை தானடையப் போவோர் கதி பெறவே. ஜீவ வசனங் கூறுவோம்; - சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். 2. காடுதனிலே அலைந்தோம்; - கிறிஸ்தேசு கர்த்தன் சேவையில் அமர்ந்தோம்; நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. ஜீவ வசனங் கூறுவோம்; - சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். 3. பூலோகம் எங்கும் நமையே - கிறிஸ்து நாதர் போகச் சொல்லி விதித்தாரே; காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து. ஜீவ வசனங் கூறுவோம்; - சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். 4. விண்ணின் மகிமை துறந்தார், - கிறிஸ்து நமை மீட்கக் குருசில் இறந்தார்; மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசுகுப்பை என் றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு. -ஜீவ ஜீவ வசனங் கூறுவோம்; - சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.