அதிகாலையிலுமைத் தேடுவேன் அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே இதுகாறும் காத்த தந்தை நீரே; இனிமேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே 1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா! ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா? எனக்கான ஈசனே! வான ராசனே! இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே 2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது, விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது? விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே 3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே! தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே! பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே! புகழார நாதனே! வேத போதனே! பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே