தோத்திரம் பாத்திரனே தேவா தோத்திரம் பாத்திரனே, தேவா, தோத்திரந் துதியுமக்கே! நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்; நித்தியம் துதியுமக்கே (2) 1. சத்துரு பயங்களின்றி - நல்ல நித்திரை செய்ய எமை பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே சுற்றிலுங் கோட்டையானாய். (2) 2. விடிந்திருள் ஏகும்வரை - கண்ணின் விழிகளை மூடாமல், துடி கொள் தாய்போல் படிமிசை எமது துணை எனக் காத்தவனே. (2) 3. காரிருள் அகன்றிடவே, - நல்ல கதிரொளி திகழ்ந்திடவே, பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன பாங்கு சீராக்கி வைத்தாய். (2) 4. இன்றைத் தினமிதிலும், -தொழில் எந்தெந்த வகைகளிலும், உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள் ஊன்றியே காத்துக் கொள்வாய். (2) தோத்திரம் பாத்திரனே, தேவா, தோத்திரந் துதியுமக்கே! நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்; நித்தியம் துதியுமக்கே (2)