சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். ஆ ஆ (2) சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் (2) அடைகிறேன் ஆறுதல் மனதில். சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். 1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே தளர்ந்த என் ஜீவியமே ஆ ஆ (2) சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் (2) ஏகுவேன் பறந்தே வேகம். சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். 2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டு என் இன்னல்கள் மறந்திடுவேன் ஆ ஆ (2) திருமறை இன்னிசை நாதம் தேனிலுமினிய வேதம் தருமெனக் கனந்த சந்தோஷம் (2) தீர்க்குமென் இதயத்தின் தோஷம். சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன். 3. எவ்வித கொடிய இடருக்குமஞ்சேன் ஏசுவை சார்ந்து நிற்பேன் ஆ ஆ (2) அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக்கொண்டால் அலைமிக மோதிடு மந்நாள் (2) ஆறுதலளிப்பாரே சொன்னால். சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன்.