கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம்; இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம். 1. பார் அதோ கல்லறை மூடின பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் - அங்கு போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதிமுன் - ஆ! ஆ! கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம்; இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம். 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் - தாம் கூறின மாமறை, விட்டனர் கல்லறை, போங்கள் கலிலேயாவுக்கு – ஆ! ஆ! கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம்; இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம். 3. அன்னா காய்பா ஆரியர் சங்கம், அதிரடி கொள்ளுதுபார் - இன்னா பூதகணங்கள் இடி ஒலி கண்டு, பயந்து நடுங்குகின்றார் - ஆ ஆ கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம்; இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம். 4. பாவம் சாபம் யாவையும் நீக்க, நரனாய் அவதரித்தார் - தேவன் கோபத் தீயில் வெந்தெரிந்ததின் பின், உயிர்த்தவர் ஜீவிக்கின்றார் - ஆ ஆ கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம்; இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம். 5. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம் வருகின்றார் ஜெய வீரன் - உங்கள் மேள வாத்தியம் கைமணி பூரிகை எடுத்து முழங்கிடுவோம் – ஆ! ஆ! கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம்; இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம்.