பாவத்தின் பலன் நரகம்
1. பாவத்தின் பலன் நரகம்
ஓ பாவி நடுங்கிடாயோ.
கண் காண்பதெல்லாம் அழியும்
காணாததல்லோ நித்தியம்.
ஏசுராஜா வருவார்
இன்னும் கொஞ்சங் காலம்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம். (2)
2. உலக இன்பம் நம்பாதே
அதின் இச்சை யாவும் ஒழியும்.
உன் ஜீவன் போகும் நாளிலே
ஒரு காசும் கூட வாராதே.
ஏசுராஜா வருவார்
இன்னும் கொஞ்சங் காலம்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம். (2)
3. உன் காலமெல்லாம் போகுதே
உலக மாயைகளிலே.
ஓ! தேவ கோபம் வருமுன்
உன் மீட்பரண்டை வாராயோ.
ஏசுராஜா வருவார்
இன்னும் கொஞ்சங் காலம்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம். (2)
4. தேவன்பின் வெள்ளம் ஓடுதே
கல்வாரி தலைதன்னிலே.
உன் பாவம் யாவும் நீங்கிப்போம்
அதில் ஸ்நானம் செய்வதாலே.
ஏசுராஜா வருவார்
இன்னும் கொஞ்சங் காலம்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம். (2)
5. மா பாவியான என்னையும்
என் நேசர் ஏற்றுக் கொண்டாரே
ஓ! பாவி நீயும் ஓடிவா
தேவாசீர்வாதம் பெறுவாய்.
ஏசுராஜா வருவார்
இன்னும் கொஞ்சங் காலம்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம். (2)