கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - தம்கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை. (2) 1. யோர்தானைக் கடந்து வந்தோம் எங்கள் யேசுவில் பெலம் அடைந்தோம். (2) சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் சோர்வின்றிக் காத்துக்கொண்டார். (2) கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - தம்கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை. (2) 2. தேசமே பயப்படாதே எங்கள் தேவன்கிரியைச் செய்கின்றார் (2) தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார் தாசர்கள் வேண்டிடுவோம். (2) கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - தம்கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை. (2) 3. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங் காரியம் செய்திடுவார் (2) கால் வைக்கும் தேசம் ஏசு தருவார் காத்திருந்தே அடைவோம். (2) கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - தம்கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை. (2) 4. ஆண்டுகள் நன்மையினால் முடி சூண்டு வளம் பெருக (2) தேசத்தின் மீதே கண்களை வைத்தே பாசமாய் நோக்கிடுவார். (2) கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - தம்கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை. (2) 5. ஜாதி ஜனங்களையும் வந்து மோதி அசைத்திடுவார் (2) காத்து தவிக்கும் உள்ளம் மகிழும் கர்த்தரே வந்திடுவார். (2) கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - தம்கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை. (2) 6. உண்மையும் நேர்மையுமாய் இந்த ஊழியம் செய்திடுவோம். (2) தூய கற்புள்ள தேவ சபையாய் தீவிரம் சேர்ந்திடுவோம். (2) கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் - தம்கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை. (2)