என் இயேசுவின் சந்நிதியில்
என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன். (2)
என்னைக் காத்திடுமே அவர் நாமமதே
துதி கீதங்கள் பாடிடுவேன்.
என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்.
1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்
கருணைக் கரம் தாங்கிடுவார் (2)
எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே.
என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்.
2. பரமன் குரல் கேட்கும் போது
பரமானந்தம் அடைந்திடுவேன். (2)
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையிலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே.
என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்.