கண்டில்லையோ கவையில்லையோ கண்டில்லையோ? கவையில்லையோ? ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ? வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார். 1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார் வாலிபர் தெருவில் மூர்ச்சையானார் வயோதிபர் வகை தெரியாது போனார் - இன்று வழிகாட்டி கிறிஸ்தவரே. கண்டில்லையோ? கவையில்லையோ? ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ? வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார். 2. அடியவர் தியாகத்தை அணிந்துவிட்டதால் கொடியவர் தானாய்த் திருந்திடுவார் அறியாமை உலகை மூடுவதேன் - என் பொறுப்பை நான் மதியாததே. கண்டில்லையோ? கவையில்லையோ? ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ? வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார். 3. உலகத்தில் வெளிச்சம் வீசவேண்டி பரலோகத் தந்தை ஆணையிட்டார் நினைப்பவர் யாரோ உழைப்பவர் யாரோ உதவுவார் யார் யாரோ? கண்டில்லையோ? கவையில்லையோ? ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ? வையகமனைத்தும் அவர் சத்தம் பேச உன்னையும் விரும்புகின்றார்.