தேவசாயல் ஆக மாறி
தேவசாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன்
நானும் தேவனோடிருப்பேன். (2)
1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே
விண்ணவர் சாயல் அடைவேன். (2)
தேவசாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன்
நானும் தேவனோடிருப்பேன்.
2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கை வேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன். (2)
தேவசாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன்
நானும் தேவனோடிருப்பேன்.
3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார். (2)
தேவசாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன்
நானும் தேவனோடிருப்பேன்.
4. ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே. (2)
தேவசாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன்
நானும் தேவனோடிருப்பேன்.
5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவக் கிரீடம் பெற்றிடுவேன். (2)
தேவசாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன்
நானும் தேவனோடிருப்பேன்.