கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு. (2)
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி (2)
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன். (2)
யார் என்ன சொன்னாலும் (2)
நான் சோர்ந்து போகமாட்டேன். (2)
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு. (2)
2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார். (2)
குருத்தோலை கையில் எடுத்து(2)
நான் ஓசன்னா பாடிடுவேன். (2)
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு. (2)
3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக்கொண்டார். (2)
சிலுவையில் அறைந்துவிட்டார் (2)
காலாலே மிதித்துவிட்டார். (2)
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு. (2)
4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கிவிட்டார. (2)
இயேசுவின் தழும்புகளால் (2)
சுகமானேன் சுகமானேன். (2)
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு. (2)
5. மேகங்கள் நடுவினிலே
என்நேசர் வரப்போகிறார். (2)
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் (2)
கண்ணீரெல்லாம் துடைப்பார். (2)
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு. (2)