உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா. (2)
1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன். (2)
மிகுந்த கனி கொடுப்பேன். (2)
உம் சீடானாயிருப்பேன் - நான் (2)
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா.
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர். (2)
உமக்கு மறைவாய் எங்கே போவேன். (2)
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் - நான் (2)
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா.
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன். (2)
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் (2)
சோர்ந்து போகமாட்டேன் - நான் (2)
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா.
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர். (2)
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர். (2)
எல்லாம் உம் கிருபை - ஐயா (2)
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா. (2)