பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று உன்னை அழைக்கிறாரே
1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணி ஆதரை மீதினில் அலைந்திடுவாயே காணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர் கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் --- வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி தற்பரன் தயவை தள்ளிடலாமா? நினையாத நேரம் மரணம் சந்தித்தால் நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? --- வாசலண்டை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்து மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன் பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின் ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? --- வாசலண்டை 4. மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில் மகிபரின் இராஜ்ஜியம் காணக் கூடுமோ பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் மெய்யாய் பிரவேசிப்பாய் தேவ இராஜ்ஜியத்தில் --- வாசலண்டை 5. வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ? --- வாசலண்டை