அதிசயமானவனை அதிலுமேலானவனை
1. இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில் கூடினால் வருவேன் என்றீரே என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற எங்களில் வந்தவர் ஆனந்தம் --- துதிப்பேன் 2. கடந்த துன்பத்தின் காலங்களில் அடைந்த ஆறா துயரங்களில் ஆறுதல் தேறுதல் அளித்திட மாறாத இயேசுக்கானந்தம் --- துதிப்பேன் 3. இன்றைத்தினம் வரைக் காத்தீரே எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே நின் கிருபையால் கடந்து வந்தோம் அன்பே ஆருயிரே ஆனந்தம் --- துதிப்பேன் 4. ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர் கானந்தமே அல்லேலூயா உமக்கல்லேலூயா எல்லா நாளும் உமக்கல்லேலூயா --- துதிப்பேன்