1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார் நித்திய வழிக்குள் நடத்திட்டார் விலையில்லா இரத்தம் சிந்தினார் விந்தையாய் என்னைச் சந்தித்தார்
பரகதி வாழ்வை தந்தவர் பரமன் இயேசு கர்த்தரே நித்திய வழிக்குள் நடத்தியவர் நிதம் அவர் துதி நான் பாடிடுவேன் அல்லேலூயா அல்லேலூயா -- அல்லேலூயா --- என்
2. பாவத்தை கழுவி பரிகரித்தார் சாபத்தை நீக்கி சங்கரித்தார் லாபம் இன்றென் ஜீவனே தாபம் எனக்கினி அவர்தானே --- பரகதி 3. என்னையே மீட்க என் இயேசு தன்னையே தியாகம் செய்தாரே அன்னையாய் அப்பனாய் ஆனவர் உன்னையும் அன்பாய் அழைக்கிறார் --- பரகதி