அல்லேலுயா துதி அல்லேலூயா -- எந்தன் அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன் இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தனைக் கொண்டாடுவேன்
2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர் சேதமும் அணுகாமல் சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும் சுகபெலன் அளித்தாரே --- அல்லேலூயா 3. சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை சிருஷ்டிகர் மறைத்தாரே கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல் கிருபையும் பொழிந்தாரே --- அல்லேலூயா 4. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம் தஞ்சமே யானாரே அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும் அடைக்கலம் அளித்தாரே --- அல்லேலூயா 5. களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என் கர்த்தரே வருவாரே ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி அனுதினம் காத்திருப்போம் --- அல்லேலூயா